பிலிப்பைன்ஸின் தவறான கருத்துகளுக்கு ஆதாரம் இல்லை:சீனா
2024-08-30 11:43:53

இவ்வாண்டின் மே முதல் ஜூலை திங்கள் வரை, சீனாவின் இயற்கை மூலவள துறை அமைச்சகத்தின் தென் சீன கடல் வளர்ச்சி ஆய்வுக் கழகம், தென் சீனக் கடலின் சியென்பி ச்சியாவ் பவளப் பாறைகளின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து, மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 30ஆம் நாளன்று முதன்முறையாக வெளியிட்டது.

அந்த அறிக்கையில் பிலிப்பைன்ஸ் கடற் காவற்துறையின் 9701 படகு, சியென்பி ச்சியாவில் தங்குவதால் அதன் அருகிலுள்ள இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இவ்வமைச்சகத்தைச் சேர்ந்த தென் சீனக் கடல் உயிரின மையத்தின் உயர் நிலை பொறியியலாளர் சியௌங் சியௌஃபி தெரிவித்தார்.

மேலும், சியென்பி ச்சியாவ் உள்ளிட்ட தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கடல் பரப்பரப்பு குறித்து சீனா சர்ச்சைக்கு இடமற்ற இறையாண்மையை கொண்டுள்ளது.  இதற்குப் போதுமான வரலாறு மற்றும் சட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.