இலங்கையில் தனிநபர் வரி வீகித திருத்தம் விரைவில் அமல்
2024-08-30 19:05:45

இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) தனி நபர் வருமான வரி செலுத்துவதில் திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

நாட்டின் சப்ரகமுவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தனி நபர் செலுத்தும் வருமான வரியை எவ்வாறு திருத்துவது என்பது குறித்து அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் இரண்டு தனித்தனி முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இரு தரப்பினரும் ஒத்த கருத்தை எட்டிய பின் வருமான வரி திருத்தம் பற்றி அறிவிக்கப்படும் எனக் கூறினார்..

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசு வரிச் சட்டங்களைத் திருத்தியது, இதன்படி மாதம் ஒன்றுக்கு 100,000 ரூபாய்க்கு (சுமார் 330 அமெரிக்க டாலர்கள்) குறைவாக வருவாய் ஈட்டும் மக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் புதிய வரிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் தொழில் வல்லுநர்கள் வரி விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.