சல்லிவனின் சீனப் பயணம் பற்றிய விவரம்
2024-08-30 10:50:08

அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசுத் தலைவரின் உதவியாளர்  ஜேக் சல்லிவனின் சீனப் பயணம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் வட அமெரிக்கா மற்றும் ஓஷானிய விவகாரத்துக்கான பிரிவுத் தலைவர் யாங்டௌ ஆகஸ்ட் 29ஆம் நாளிரவு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது யாங்டௌ கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீயின் அழைப்பையேற்று, சல்லிவன் ஆகஸ்ட் 27முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் சல்லிவனுடன் சந்திப்பு நடத்தினார். 27, 28ஆம் நாட்களில், சல்லிவனுடன் வாங்யீ தொலைநோக்குத் தொடர்பை நடத்தினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சாங் யியோசியாவும் சல்லிவனைச் சந்தித்துரையாடினார்.

நொலைநோக்கு தொடர்பில், இரு நாட்டுத் தலைவர்களிடையில் அண்மையில் நடைபெற்ற புதிய சுற்றுத் தொடர்புகள் குறித்து வாங்யீயும் சல்லிவனும் விவாதித்தனர். தூதாண்மை சார்ந்து இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வாய்ந்த  தலைமைப் பங்களிப்பை மேலும் வெளிக்கொணர்வதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், சீன-அமெரிக்க உறவு மற்றும் கொந்தளிப்பான உலகத்துக்கு நிலைப்புத் தன்மையையும் உறுதித் தன்மையையும் இது கொண்டு வரும் என்று யாங்டௌ தெரிவித்தார்.