இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சேவை வர்த்தகத் தொகை அதிகரிப்பு
2024-08-30 19:28:32

இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றின் இதே காலத்தை விட மிக உயர் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் நாள் அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது.

இவ்வாண்டின் முற்பாதியில் பயணச் சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 96 ஆயிரத்து 170 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 47.7 விழுக்காடு அதிகமாகும். அறிவுகள் செறிந்த சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.7 விழுக்காடு அதிகரித்தது. அறிவு சொத்துரிமையின் பயன்பாட்டுக் கட்டணமும், தனிநபர் பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு சேவையும் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 13.8 மற்றும் 13.1 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.