சீன-இந்திய எல்லை விவகாரம் தொடர்பான 31ஆவது கூட்டம்
2024-08-30 10:39:55

சீன-இந்திய எல்லை விவகாரங்களுக்கான 31வது கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அண்மையில் சந்தித்த போது எட்டிய முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தவும் சீன-இந்திய எல்லை நிலைமையைத் புதிய காலக்கட்டத்தில் நுழைவதைக் கூட்டாக விரைவுபடுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

மேலும், சீன-இந்திய எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக்கொண்டு, கருத்து வேற்றுமையை மேலும் கட்டுப்படுத்தி, ஒருமித்த கருத்துக்களை விரிவாக்கி, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வை வலுப்படுத்தி, சரியான கவனத்தைக் கருத்தில்கொண்டு, இரு தரப்புகள்ளால் ஏற்றுக்கொள்ளப்பட தீர்வு திட்டத்தை வெகுவிரைவில் எட்ட வேண்டும். கலந்தாய்வின் மூலம் எட்டப்பட்டுள்ள சாதனைகளை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. எல்லை பிரச்சினை தொடர்பான தீர்மானம் மற்றும் நம்பிக்கை ரீதியிலான நடவடிக்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து எல்லைப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாக பேணிக்காக்கவும் இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.