தனது கலாச்சாரங்களை ஒன்றாக சேர்த்துள்ள சீன நவீனமயமாக்கல் : மத்திய ஆப்பிரிக்க குடியரசுத் தலைவர்
2024-08-31 19:17:31

சீனா தனது கலாச்சாரங்களை நவீனமயமாக்கலில் ஒன்றாக சேர்த்துள்ளது. இந்த வளர்ச்சி முறை மிகவும் சிறப்பானது. இதனால் உத்வேகம் பெற்றுள்ளோம் என்று மத்திய ஆப்பிரிக்க குடியரசுத் தலைவர் டுவாதேரா சுட்டிக்காட்டினார். சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தபோது, சீன நவீனமயமாக்கல் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மேற்கத்திய மாதிரியைப் போலவே ஒன்றை உருவாக்குவது என்பது ஒரேயொரு வளர்ச்சி வழிமுறை மட்டுமல்ல. சீனாவின் வளர்ச்சி முறை, இலக்குகளை வரைந்து, புதிய திசைக்கு வழிகாட்டும் அதேவேளையில், மக்களின் நலன்கள் மற்றும் சீனக் கலாச்சாரங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. சீனாவில் பயணம் செய்யபோது, இந்த பாரம்பரியமும் நவீனமும் ஒன்றிணைவது, தனிச்சிறப்புமிக்க பண்பாட்டுச் சூழல், உயிராற்றல்மிக்க பொருளாதாரம் ஆகியவை எல்லாம் கண்களைக் கவர்ந்துள்ளது என்று கூறினார்.

விரைவில் நடைபெறும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு குறித்து டுவாதேரா பேசுகையில்

ஆப்பிரிக்கா-சீனா இடையேயான ஒத்துழைப்புக்கு நீண்டகால வரலாறு உண்டு. இரு தரப்புகளின் சமூக நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப, இறையாண்மைக்கு ஒன்றுக்கு ஒன்று மரியாதை அளித்து, பரஸ்பர நலன் தந்து வெற்றி-வெற்றி நிலை அடையும் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேர்மையான மற்றும் மனமார்ந்த ஒத்துழைப்பில் நட்புறவு நிறைந்துள்ளது. இந்த சிறப்பம்சம், ஆப்பிரிக்கா மற்றும் சீனா இடையே பல ஒத்துழைப்பு திட்டங்களில் காணப்பட்டது. இதனால், மேலதிக ஆப்பிரிக்க நாடுகள், சீனாவுடனான ஒத்துழைப்பு உறவை ஆழமாக்க விரும்புகின்றன என்று குறிப்பிட்டார்.