பிரேசிலில் எக்ஸ் சமூக வலைதளம் இடைநிறுத்தம்: பிரேசில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
2024-08-31 16:29:19

பிரேசிலில் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு சட்ட பிரதிநிதி இல்லாத காரணமாக,  எக்ஸ் வலைதளம் அந்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பிரேசில் உச்ச நீதிமன்றம் 30ஆம் நாள் தீர்ப்பு அளித்தது.

பிரேசில் உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தீர்ப்பு ஆவணத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஆணையம் 24மணி நேரத்துக்குள், உள்நாட்டில் எக்ஸ் வலைதளத்தின் இயக்கத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் இந்த தடை உத்தரவை அமலாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.