© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் CGTN வெளியிட்ட கள ஆய்வின் படி, சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பின் நடைமுறைகள் மற்றும் கருத்துக்கள் வளரும் நாடுகளுக்கு சர்வதேச விவகாரங்களின் ஒத்துழைப்பில் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. உலகளாவிய நிர்வாக முறையை சீர்திருத்துவதற்கான முக்கியமான தீர்வுகளையும் வழங்குகின்றன என்று 90.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
சீனா எப்போதும் ஆப்பிரிக்காவை மதிக்கிறது, ஆப்பிரிக்காவை நேசிக்கிறது, ஆப்பிரிக்காவை ஆதரிக்கிறது என்று 81.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் வளர்ச்சியை சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அடித்தளமாக சீனா எப்போதும் கருதுகிறது என்பதை 80.9 விழுக்காட்டினர் பாராட்டினர்.
சீனா எப்போது பின்பற்றியுள்ள ஆப்பிரிக்காவின் மீதான உண்மையான மற்றும் நேர்மையான ஒத்துழைப்பு கருத்துக்களை 86.3 விழுக்காட்டினர் வெகுவாக பாராட்டினர். புதிய காலத்தில் மேலும் நெருங்கிய சீனா-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மேம்படுத்தியுள்ளது என்று 74.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். ஆப்பிரிக்காவில் மேலதிக சீன பண்பாட்டுப் பரவல் நடவடிக்கைகள் நடைபெறும் என்று 89.2 விழுக்காட்டினர் எதிர்பார்க்கின்றனர்.
கேமரூன், போட்ஸ்வானா, எகிப்து, எத்தியோப்பியா, கானா, கென்யா, மொராக்கோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா ஆகிய பத்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் கணக்கெடுப்பில் 10125 பேர் பதில் அளித்துள்ளனர்.