© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஈரான் ஆயுதப் படையின் முப்படை தளபதிகள் தலைமையகம் செப்டம்பர் முதல் நாள் புதிதாக வெளியிட்ட கள ஆய்வு அறிக்கையின் படி, ஈரானின் முன்னாள் அரசுத் தலைவர் சையத் இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடைய குழுவினர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் அடர்த்தியான மூடுபனி உள்ளிட்ட மோசமான வானிலை நிலைமையாகும். வேண்டுமென்றே அழிவின் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த அறிக்கையின் படி, தொடர்புடைய நிபுணர்கள் ஹெலிகாப்டர் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கான அனைத்து ஆவணங்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்து, அனைத்து முக்கிய பழுதுபார்ப்புகள் மற்றும் முக்கிய கூறுகளை மாற்றுவது வரையறை விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதைத் உறுதிப்படுத்தினர். ஹெலிகாப்டரில் மீதமுள்ள கூறுகள் மற்றும் அமைப்புகளை நிபுணர்கள் சோதித்தனர். இந்த விபத்துக்கு வழிவகுக்கும் குறைபாடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.