இலங்கையின் மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் நாஸ்டாக் நிறுவனத்துடன் கூட்டு உடன்படிக்கை
2024-09-02 10:18:05

எஸ்இசி எனப்படும் இலங்கை மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நாஸ்டாக் நிறுவனத்திடம் இருந்து பங்கு சந்தை கண்காணிப்பு முறையை பெற்றுள்ளதாக இலங்கையின் எஸ்இசி தலைவர் பைசல் சாலிஹ்  கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்த ஓப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 30ம் நாள் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம், பங்கு சந்தை முறைகேடுகள் மற்றும் மோசடிகளைக் கண்டறிந்து அதனைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சாலிஹ் கூறுகிறார்.

இவை பங்கு சந்தை மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன் நேர்மையான மற்றும் வெளிப்படையான வர்த்தக சூழலை வளர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

நாஸ்டாக் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் பங்கு சந்தை கண்காணிப்பு, விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சோதனை முறையில் இவ்வொப்பந்தம் ஐந்து மாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.