வேகமாக திவாலாகி வரும் வழியில் அமெரிக்கா: எலான் மஸ்க் எச்சரிக்கை
2024-09-02 20:01:16

அரசின் தற்போதைய செலவுகளின் படி, அமெரிக்கா வேகமாக திவாலாகி வரும் வழியில் இருக்கிறது என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தொழில் முனைவோர் எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அரசின் அதிகப்படியான செலவு, அமெரிக்காவின் பணவீக்கத்துக்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்பு, பீட்டர் ஜி. பீட்டர்சன் நிதியம் வெளியிட்ட அறிக்கையில்,  அமெரிக்க அரசின் 35 லட்சம் கோடி டாலர் கடன்கள் அமெரிக்க மக்கள் மீது சுமத்தினால், ஒவ்வொருவருக்கும்  ஒரு லட்சத்துக்கு 4 ஆயிரம் டாலர் கடன் வரும் என்று கணிக்கப்பட்டது.

மேலும், 2034ஆம் ஆண்டில், அமெரிக்க அரசின் கடன் 50 லட்சம் கோடி டாலராக உயரும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி வரவுச் செலவு அலுவலகம் தெரிவித்தது.