தென்னாப்பிரிக்க மற்றும் செனகல் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ சந்திப்பு
2024-09-02 10:14:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் முறையே தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் ரொனால்ட் லமோலா மற்றும் செனகல் வெளியுறவு அமைச்சர் யாசின் ஃபாலைச் சந்தித்துரையாடினார்.

வாங்யீ கூறுகையில், புதிய சுற்று சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு துவங்கவுள்ளது. இம்மன்றம் நிறுவப்பட்ட கடந்த 24ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் வளர்ச்சியைப் பயனுள்ளதாக முன்னேற்றி ஆப்பிரிக்காவுடனான சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை வழிநடத்தியுள்ளது. ஆப்பிரிக்காவுடன் இணைந்து ஒத்துழைப்பை மேலும் நெருக்கமாக்கி நடப்பு உச்சி மாநாட்டை சீன-ஆப்பிரிக்க ஒற்றுமை மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் இன்னொரு நிகழ்வாக நடத்தி இரு தரப்பு ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டுவதை சீனா முன்னேற்ற விரும்புகிறது என்றார்.

லமோலா குறிப்பிடுகையில், ஒரே சீனா என்ற கொள்கையைத் தென்னாப்பிரிக்க அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது. சீனா முன்வைத்த உலக முன்மொழிவுகளைத் தென்னாப்பிரிக்கா ஆதரித்து சீனாவுடன் இணைந்து உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

செனகல்-சீன உறவு முன்மாதிரியான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்று ஃபால் கூறினார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டின் போது, அரசுத் தலைவர் ஃபயே சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் ஆப்பிரிக்காவுக்கு அப்பால் உள்ள நாட்டில் பயணம் மேற்கொள்ளும் முதலாவது நாடு சீனா ஆகும். அதனை வாய்ப்பாகக் கொண்டு, செனகல்-சீன பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை மேலும் ஆழமாக்க விரும்புவதாகவும் ஃபால் தெரிவித்தார்.