காலநிலை பற்றிய சீன-அமெரிக்கப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது
2024-09-03 16:04:52

சீனா மற்றும் அமெரிக்கா இரு தரப்புகளின் தீர்மானத்தின்படி, சர்வதேச காலநிலை கொள்கைக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் உயர் நிலை ஆலோசகர் போடெஸ்டா செப்டம்பர் 4 முதல் 6ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது காலநிலை மாற்ற விவகாரத்துக்கான சீனாவின் சிறப்பு தூதர் லியு சென்மின்னுடன் இணைந்து கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கவுள்ளார் என்று சீன உயிரினச் சுற்றுச்சூழல் அமைச்சகம் 3ஆம் நாள் தெரிவித்தது. சீன-அமெரிக்கப் பணி குழு கட்டுக்கோப்பின் கீழுள்ள எதார்த்தமான ஒத்துழைப்பு, தத்தமது நாட்டின் காலநிலை கொள்கை மற்றும் செயல்கள், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான பலதரப்பு முன்னேற்ற போக்கு ஆகியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.