© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தென் சீனக் கடலில் சீனக் கடலோர காவல் படகு பிலிப்பைன்ஸ் படகு மீது அபாயகரமான செயலை நடத்தியதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு செயலாக்க சேவைப் பிரிவு செப்டம்பர் முதல் நாள் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியது.
சீனக் கடலோர காவல் படகு பிலிப்பைன்ஸ் படகு மீது வேண்டுமென்றே மோதியதாகவும் இதற்கு முன்பு, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அவதூறு பரப்பியது. ஆனால், உண்மைக்கு முன், இந்த அரசியல் தந்திரங்கள் அனைத்தும் ஆதாரமின்றி பலிக்காது.
சமீபத்தில் 10 நாட்களுள், சீனாவின் ரென் ஐய் பாறை மற்றும் சியென் பின் பாறை கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் 4முறை அபாயகரமான தாக்குதல் நடவடிக்கை மற்றும் விமான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவற்றுக்கான சீனாவின் பதில் நடவடிக்கை சட்டப்பூர்வமானதும் நியாயமானதுமாகும். இரு தரப்பின் படகுகள் மோதல் சம்பவத்தை ஏற்படுத்தியதன் பொறுப்புக்குப் பிலிப்பைன்ஸ் முற்றிலும் ஏற்க வேண்டும். அதன் பின்னணியில் அமெரிக்கா தான் உள்ளது. அத்துடன் தென் சீனக் கடல் நிலைமையும் பதற்றமாக்கி வருகிறது.
முன்னதாக 2021ஆம் ஆண்டில், சீன மீன்பிடி கப்பல் தென் சீன கடல் பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை மீது அமெரிக்கா அவதூறு பரப்பியது. இது குறித்து பிலிப்பைன்ஸ் “எதிர் நடவடிக்கையை” எடுக்க வேண்டுமென வலியுறுபத்தியது. 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை, தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் அனைத்து ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் பின்னணியில் அமெரிக்காவின் தாக்கம் காணப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, ஆசிய-பசிபிக் விவகாரங்களில் அது தலையிடுவது அமெரிக்காவின் உலகளாவிய நெடுநோக்கிற்கு உதவியளித்து சொந்த செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இச்செயல் தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் பிராந்திய நாடுகளின் பொது விருப்பத்தை மீறியுள்ளதோடு, சொந்த நலனையும் சர்வதேச நற்பெயரையும் சீர்குலைத்துள்ளது.
தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பது பிராந்திய நாடுகளின் பொது விருப்பமாகும். மேலும், உரிமைப் பிரதேசம் மற்றும் கடல் உரிமைகளைப் பேணிக்காப்பதற்கான சீனாவின் மனவுறுதியும், பிராந்திய நாடுகளுடன் இணைந்து தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கான மனவுறுதியும் ஒருபோதும் மாறாது.