ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருடன் சந்திப்பு:ஷிச்சின்பிங்
2024-09-03 14:25:23

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் பங்கெடுக்க வந்துள்ள ஆப்பிரிக்க ஒன்றியக் கமிட்டியின் தலைவர் முசா ஃபகி மஹாமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்பிரிக்க ஒன்றியம், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகள் வளர்ச்சி அடைந்து, சர்வதேச ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி வருகின்றன. சர்வதேச மற்றும் பிரதேசத்தின் விவகாரங்களில் நெருக்கமாக ஒருங்கிணைந்து ஒத்துழைத்து வருகின்றன. சீன-ஆப்பிரிக்க நட்புறவில் இந்த ஒன்றியம் மேலும் முக்கியப் பங்காற்றுவதற்கு சீனா ஆதரவளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டின் மூலம் என்ற வாய்ப்பின் மூலம், சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூக கட்டுமானத்தை புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.