ஜப்பானின் தொடர்ந்து வரும் அரிசி பற்றாக்குறை
2024-09-03 17:28:12

ஜப்பானின் தலைநகரிலும் ஒசாகா நகரிலும் சமீபத்தில் அரிசி பற்றாக்குறை நிலை தொடர்ந்து வருகிறது. பல அங்காடிகளில் அரிசி இருப்பில்லை என்றும் வாங்குவதில் கட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரிய வந்துள்ளது. விநியோகத்தின் ருக்கடியைத் தணித்து, அதிக அளவில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கூடியவிரைவில் கையிருப்பு அரிசிகளை பயன்பாட்டுக்கு விடுவிக்க வேண்டும் என்று ஒசாகா அரசு அதிகாரிகள் 2ஆம் நாள் மீண்டும் கேட்டுக் கொண்டனர். ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் இந்த கோரிக்கையை மறுத்துள்ளனர்.

ஜுலை முதல் அந்நாட்டின் சில பகுதிகளில் தோன்றிய அரிசி பற்றாக்குறை நிலை, தற்போது அதிக பகுதிகளுக்குப் பரவியுள்ளது. அண்மையில் சில பகுதிகளில் புதிய அரிசிகள் சந்தைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய அரிசியின் விலை, கடந்த ஆண்டை விட ஒரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.