வெனிசூலா தலைவரின் விமானத்தை கைப்பற்றியது அமெரிக்கா
2024-09-03 19:37:14

அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் தடைச் சட்டம் ஆகியற்றை மீறியதன் காரணமாக, டொமினிகன் குடியரசில் வெனிசூலா  அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ பயன்படுத்திய விமானத்தை அமெரிக்கா கைப்பற்றியதாக,  அந்நாட்டு நீதித் துறை அமைச்சகம் 2ஆம் நாள் தெரிவித்தது.

டசால்ட் பால்கன் 900 இ.எக்ஸ் ரக விமானத்தை டொமினிகன் குடியரசில் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா அதனை புளோரிடா மாநிலத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க தரப்பின் இச்செயலை வெனிசூலா  வன்மையாக கண்டித்துள்ளது. வெனிசூலா  வெளியுறவு அமைச்சர் 2ஆம் நாள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் செயலானது, குற்றம் மற்றும் கடற்கொள்ளையர் ரீதியான செயலாகும் என்று குற்றஞ்சாட்டினார்.