சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் பாராட்டுக்கள்
2024-09-04 10:14:54

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் ஆப்பிரிக்க மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனா வெற்றி பெற்றுள்ள ஒரு நாடு என்று 98.7 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு, படித்து, பயணம் மேற்கொள்ள 96.7 விழுக்காட்டினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சீனப் பொருளாதாரம் வலிமையாக வளர்ந்து வருகிறது என்று 97.1 விழுக்காட்டு இளைஞர்கள் கருதுகின்றனர். சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு 98.2 விழுக்காட்டு இளைஞர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு மாபெரும் பங்காற்றியுள்ளது என்று 95.8 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.

தவிரவும், சீனாவின் தொழில் நுட்பத் துறையின் மாபெரும் வளர்ச்சி குறித்து 99 விழுக்காட்டினர்கள் வியப்பு தெரிவித்தனர். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் மூலம், ஆப்பிரிக்க பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி நிலைமை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று 88.8 விழுக்காட்டினர்கள் குறிப்பிட்டனர். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு வலிமையான உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது என்று 89.8 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.

ஆப்பிரிக்காவின் 10 நாடுகளின் 10 ஆயிரத்து 125 மக்கள் கருத்து கணிப்பில் பங்கெடுத்தனர். கேமரூன், எகிப்து, கென்யா முதலியவை இதில் அடக்கம். 18 முதல் 24 வயது வரையான இளைஞர்கள் இதில் 36.6 விழுக்காட்டை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.