அறிவுசார் சொத்துரிமையின் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய நிலைமை
2024-09-04 15:08:33

உலகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் நிதானமான ஒத்துழைப்பு உறவைச் சீனா உருவாக்கியுள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அறிவுசார் சொத்துரிமை பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. அறிவுசார் சொத்துரிமையின் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீட்டு எண் பற்றிய அறிக்கையில் சீனாவில் உலகின் சிறந்த 100 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க்க் குழுக்களின் எண்ணிக்கை 26ஐ எட்டி, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக உலகில் முதலிடத்தை வகித்துள்ளது. ஐந்து சீன நிறுவனங்கள் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உலகளாவிய புத்தாக்க விருதை வென்றன.

அதே வேளையில், அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் முறையான பரிமாற்ற அமைப்பு முறையைச் சீனா கட்டியமைத்து, கருத்துகள் மற்றும் முறையீடுகளை சரியான நேரத்தில் கேட்டு, சீனாவில் முதலீடு செய்யவும் சீனாவின் வளர்ச்சி நலத்தொகை மற்றும் மிக பெரிய சந்தைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அதிக வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.