2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் குட்ரெஸ்
2024-09-04 09:59:05

ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கிற்கு வந்து, 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

குட்ரெஸ் கூறுகையில், ஆப்பிரிக்க விவகாரம், ஐ.நா.வின் பணியின் மிக முக்கிய பகுதியாகும். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாகும். இதுவும் தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் மைய உள்ளடக்கமாகும். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி, உலக அளவில் சிறந்த ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றது என்றார்.