நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் சீனாவும் ஆப்பிரிக்காவும்
2024-09-05 11:28:49

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 5ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரின் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார்.

தன்னுடைய உரையில், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை, உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி வகிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சீன-ஆப்பிரிக்காவின் நவீனமயமாக்கம் இல்லாவிடில் உலகின் நவீனமயமாக்கம் இல்லை எனத் தெரிவித்தார்.

அடுத்த 3ஆண்டுகாலத்தில் ஆப்பிரிக்க தரப்புடன் கையோடு கை கோர்த்து, நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் 10 கூட்டாளி செயல் திட்டங்களை மேற்கொள்ளச் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார். நாகரிகங்களுக்கிடையில் பரஸ்பர கற்றல், வர்த்தகச் செழிப்பு, தொழில் சங்கிலி ஒத்துழைப்பு, ஒன்றுடன் ஒன்று இணைப்பு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், வேளாண்மை மற்றும் வாழ்வாதாரம், மானுடப் பண்பாட்டுப் பரிமாற்றம், பசுமை வளர்ச்சி, பொது பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தக் கூட்டாளிச் செயல் திட்டங்கள் அடங்கும். இவற்றின் மூலம், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை ஆழமாக்கி உலகின் தெற்கு நவீனமயமாக்கத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.