புதிய சர்வதேச உறவுக்கு முன்மாதிரியாகத் திகழும் சீன-ஆப்பிரிக்க உறவு – ஷிச்சின்பிங்
2024-09-05 11:00:27

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 5ம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீன-ஆப்பிரிக்க நட்புறவு வாழையடி வாழையாகத் தொடர்ந்து வருகிறது. 2000ஆம் ஆண்டில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் நிறுவப்பட்டது முதல் கடந்த 24 ஆண்டுகளில் குறிப்பாக புதிய யுகத்தில், சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து நேர்மை மற்றும் நட்பார்ந்த சிந்தனையுடன் முன்னேறி வருகிறது. மாற்றங்கள் ஏற்பட்டு வரும் உலகின் நிலைக்கேற்ப சீனாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து, தத்தமது நியாயமான நலன்களைப் பேணிக்காத்து, இரு தரப்பின் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை அளித்து வருகின்றன. அதனால் சீன-ஆப்பிரிக்க உறவு, புதிய சர்வதேச உறவிற்கு முன்மாதிரியாக அமைகிறது என்று தெரிவித்தார்.