காந்தியின் முந்தைய இல்லத்தில் பார்வையிட்ட சீனத் தூதர்
2024-09-06 19:44:58

இந்தியாவுக்கான சீனத் தூதர் சு ஃபெய் ஹாங் செப்டம்பர் 5ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள காந்தி இல்லத்தையும் சபர்மதி ஆற்றங்கரை திட்டப்பணியையும் பார்வையிட்டார்.

சு ஃபெய்ஹாங் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் குஜராத் மாநிலத்தில் தனது முதலாவது இந்திய பயணத்தை தொடங்கி, இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன், அவர் காந்தியின் இல்லத்தையும் சபர்மதி ஆற்றங்கரை திட்டப்பணியையும் பார்வையிட்டார். இரு நாட்டு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்துகளை எட்டினர் என்று தெரிவித்தார். மேலும், பத்து ஆண்டுகளுக்குப் பின், சீன-இந்திய உறவை மேம்படுத்தும் முக்கியமான தருணத்தில் இருக்கின்றோம். இரு நாட்டின் பல்வேறு துறையினர்கள், கூட்டு முயற்சியுடன், இரு நாட்டு உறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சு ஃபெய்ஹாங் விருப்பம் தெரிவித்தார்.