சீன-ஆப்பிரிக்க அரசுத் தலைவர்களுடன் சந்திப்பு
2024-09-06 11:52:34

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 6ஆம் நாள் முற்பகல், மக்கள் மாமண்டபத்தில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு வருகை புரிந்துள்ள சோமாலிய அரசுத் தலைவர் முகமத், புரூண்டி அரசுத் தலைவர் என்டாயிஷ்மியே, காங்கோ குடியரசின் தலைவர் சசௌ, லைபீரிய  அரசுத் தலைவர் போகாய் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.

காங்கோ குடியரசின் தலைவர் சசௌவைச் சந்தித்த போது, ஷிச்சின்பிங் கூறுகையில் இந்த உச்சிமாநாட்டின் முக்கியச் சாதனைகள், சீன-ஆப்பிரிக்க உறவுக்கு வழிகாட்டியுள்ளதோடு, இரு தரப்பின் நவீனமயமாக்கத்தை நனவாக்கும் பணியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடையும் போது நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்ட இரு தரப்பும் கடமைக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதன் மூலம், புதிய யுகத்திற்கேற்ப அனைத்துக் காலங்களிலும் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தைக் கையோடு கை கோர்த்து கட்டியமைக்கும் மன உறுதியை சர்வதேச சமூகத்திடம் வெளிக்காட்டியுள்ளோம். இவ்வாண்டு, சீன-காங்கோ குடியரசு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை வாய்ப்பாகக் கொண்டு இரு தரப்புகளின் தலைமுறையான நட்புறவை வலுப்படுத்தி சீராக வளர்த்து, சீன-ஆப்பிரிக்க உறவுக்குரிய முன்மாதிரியை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.