சீன அரசுத் தலைவர்-காங்கோ குடியரசு தலைவர் மனைவிகள் சந்திப்பு
2024-09-06 15:22:56

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார், செப்டம்பர் 6ம் நாள் காலை, காங்கோ குடியரசு தலைவர் சாசொவின் மனைவி அன்டோவெனெட்டை தேநீர் விருந்தில் சந்தித்து பேசினார்.

ஆப்பிரிக்க சுகாதாரம் மற்றும் உடல் நல இலட்சியத்தின் வளர்ச்சி முன்னெடுப்பில் அன்டோவெனெட் நீண்டகாலமாக பங்காற்றி வருவதை பெங் லியுவான் அம்மையார் பாராட்டினார். சீனாவும், காங்கோ குடியரசும் குடும்பம் போல நட்புறவு கொள்கின்றன. இரு தரப்பும், பல்வேறு துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சீன-காங்கோ மற்றும் சீன-ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று பெங் லியுவான் அம்மையார் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.