சீன-ஆப்பிரிக்க நவீனமயமாக்கத்தின் புதிய வழிகாட்டல்
2024-09-06 09:48:17

2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாடு செப்டம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தி சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ள அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை நெடுநோக்கு உறவு நிலைக்கு உயர்த்தும் கருத்தை முன்வைத்தார். இரு தரப்புறவை புதிய யுகத்திற்கு ஏற்ப அனைத்து காலங்களிலும் உரிய சீன-ஆப்பிரிக்க எதிர்கால சமூகமாக உயர்த்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார். மேலும், 6 துறைகளில் நவீனமயமாக்கத்தைக் கூட்டாக கட்டிமைக்க முன்மொழிந்து 10 கூட்டாளி செயல் திட்டங்களை அறிவித்தார்.  இவை இரு தரப்பின் நவீனமயமாக்க முன்னெடுப்பை நனவாக்குவதற்கான உறுதியான திசை மற்றும் வழிமுறையை உறுதிப்படுத்தியுள்ளன.

பெய்ஜிங் உச்சிமாநாடு புதிய யுகத்தில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புகளின் இன்னொரு மைல் கல்லாகத் திகழ்வதாகச்  சீன மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு துறையினர்கள் தெரிவித்தனர். ஆப்பிரிக்க-சீன உறவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் அன்று ஆகும். ஆப்பிரிக்கா மீதான மேலும் திறப்புக் கொள்கை உள்ளிட்ட சீன அரசுத் தலைவர் அறிவித்த புதிய செயல் திட்டங்கள் ஆப்பிரிக்காவைப் பெரிதும் ஊக்குவித்துள்ளதாகப் போட்ஸ்வானா அரசுத் தலைவர் மோக்வீட்சி மஸிசி கூறினார். 

நீதி மற்றும் நியாயம், திறப்பு மற்றும் கூட்டு வெற்றி, மக்களே முதன்மை எனும் கொள்கை, பல்வகை மற்றும் பொறுமை தன்மை, உயிரின நட்பு, அமைதி மற்றும் பாதுகாப்புடன் கூடிய நவீனமயமாக்கத்தை வளர்க்க வேண்டுமென்ற கருத்தைச் சீனா இவ்வுச்சிமாநாட்டில் முன்வைத்துள்ளது. இது, சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் கூட்டு வளர்ச்சிக்குப் பொருந்தியதோடு, ஆப்பிரிக்காவின் மறுமலர்ச்சிக்கும் உலகின் தெற்கு நவீனமயமாக்கத்துக்கும் உந்து ஆற்றலைக் கொண்டு வரும்.

நவீனமயமாக்கத்தைச் சீனாவும் ஆப்பிரிக்காவும் கைகோர்த்து கொண்டு முன்னேற்றுவது இரு தரப்பு மக்களுக்கும் மேலதிக நன்மை தரும். மேலும், உலகின் தெற்கின் வளர்ச்சிக்கும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் அது மேலதிக ஆற்றலையும் விளைவிக்கும்.