சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் 4 சாதனைகள்:சீன வெளியுறவு அமைச்சர்
2024-09-06 09:58:02

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செப்டம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் 4 சாதனைகள் குறித்து எடுத்துக்கூறினார்.  

அவர் கூறுகையில், இந்த உச்சி மாநாட்டில் முதலாவதாக சீன மற்றும் ஆப்பிரிக்காவின் தொடர்புடைய நாடுகளுடனான தூதாண்மையுறவு, நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது, சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையிலான ஒட்டுமொத்த உறவு, புதிய யுகத்திற்கேற்ப அனைத்துக் காலங்களிலும் பொது எதிர்கால சமூகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது, நவீனமயமாக்கத்தை இரு தரப்பும் கையோடு கை கோர்த்து முன்னேற்றும் 6 நடவடிக்கைகள் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 4ஆவது, அடுத்த காலக்கட்டத்தில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.