© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
8ஆவது சீன-ஆப்பிரிக்க தொழில் முனைவோர்கள் மாநாடு பெய்ஜிங்கில் 6ஆம் நாள் துவங்கியது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உரைநிகழ்த்தியபோது, சீன மற்றும் ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கு, இரு தரப்புக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அஸ்திவாரம் போன்று முக்கியப் பங்காற்றி வருகின்றது என்று தெரிவித்தார். மேலும், தொழில் முனைவோர்கள், சமூக உற்பத்தியின் அமைப்பாளராகவும், சமூக செல்வத்தை உருவாக்கியவராகவும், சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பவராகவும் விளங்குகின்றனர். சீன மற்றும் ஆப்பிரிக்க தொழில் முனைவோர்கள், ஒத்துழைப்பை ஆழமாக்குவதில் ஊன்றி நிற்கவும், சீன மற்றும் ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கும், முழு உலகின் வளர்ச்சிக்கும் மேலும் அதிகமான பங்காற்ற வேண்டும் என்று லீ ச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.