கல்வி மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு பற்றிய சீன-ஆப்பிரிக்கா-யுனெஸ்கோ ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை துவக்கம்
2024-09-07 17:39:35

கல்வி மற்றும் பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பு பற்றிய சீன-ஆப்பிரிக்கா-யுனெஸ்கோ ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவெய்ஷியாங் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பு, சீன-ஆப்பிரிக்க நட்பார்ந்த ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாகும். ஆப்பிரிக்கா மற்றும் யுனெஸ்கோவுடன் இணைந்து, கல்வி ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றி, சீன-ஆப்பிரிக்க கூட்டு நவீனமயமாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது. முதலாவதாக, உலகளவில் 2030ஆம் ஆண்டு கல்வி நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி, எண்ணியல் கல்வி பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு மற்றும் தொழில் புரித்தலுக்கு ஆதரவு அளித்து, ஆப்பிரிக்கப் பெண் தொழில் நடத்துபவருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மூன்றாவதாக, பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பை வலுப்படுத்தி, பண்பாட்டுப் பரிமாற்ற மையங்களை நிறுவி, பண்பாட்டு மற்றும் கலைக் கண்காட்சிகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் அரசு அதிகாரிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பொறுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 460 பேர் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.