இலங்கை சுங்கத்துறை கடந்த 8 மாதங்களில் 1 டில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை
2024-09-07 16:48:29

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கை நாட்டின்  சுங்கத்துறை ஒரு ட்ரில்லியன் ரூபாய் (சுமார் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத்துறை பொது இயக்குனர் சரத் நோனிஸ் கூறியதை மேற்கோள் காட்டி, அந்நாட்டின் அரசுத் தலைவர் ஊடகப்பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சுங்கத்துறை நிர்வாகம், ஒரு ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுவது இதுவே முதல்முறை என்றும் நோனிஸ் கூறினார். சர்வதேச நாணய நிதியம் (IMF) 2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு 1.534 டிரில்லியன் ரூபாய் (சுமார் 5 பில்லியன் டாலர்கள்) வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த இலக்கை விரைவில் அடைந்து விடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்க வருவாய்க்கான முந்தைய சாதனை 2023ம் ஆண்டில் 975 பில்லியன் ரூபாய் (சுமார் 3.25 பில்லியன் டாலர்கள்) இலக்கை எட்டியதாகவும், நோனிஸ் எடுத்துரைத்தார்.