© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2024ஆம் ஆண்டுக்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில், சீனாவும் ஆப்பிரிக்காவும் நவீனமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றுவது பற்றிய வரைபடம் வெளியிடப்பட்டது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான முக்கிய அடிப்படையான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கு இரு தரப்புத் தொழில் முனைவோர் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
சீன-ஆப்பிரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கு உறுதியான அடிப்படை உள்ளது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில், சீன-ஆப்பிரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு விரைவாக வளர்ந்து, அதிக சாதனைகளைப் படைத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிரிக்காவின் மிக பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக சீனா திகழ்கிறது. 2023ஆம் ஆண்டு இரு தரப்பு வர்த்தக தொகை, 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 35 விழுக்காடு அதிகரித்தது.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் நடப்பு உச்சி மாநாட்டில், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆப்பிரிக்காவுடன் இணைந்து நவீனமயமாக்கத்தை கூட்டாக முன்னேற்றுவது தொடர்பான பத்து கூட்டாளி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விருப்பம் முன்வைக்கப்பட்டது. இது, தற்போதும், அடுத்த காலக் கட்டத்திலும் சீன-ஆப்பிரிக்க எதார்த்தமான ஒத்துழைப்புக்கான முக்கிய நெறியாகும் என்றும் புதிய துவக்கப் புள்ளியில் நின்று, சீனா மற்றும் ஆப்பிரிக்கத் தொழில் நிறுவனங்கள் மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளைப் பெறும் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.
நவீனமயமாக்கத்தை நோக்கி கூட்டாக முன்னேறும் போக்கில் சீனா ஆப்பிரிக்காவுக்கு உகந்த தொழில் நுட்ப மற்றும் தொழில் சங்கிலியை வழங்கி, “ஆப்பிரிக்காவில் தயாரிப்பின்” தரம் மேம்பட உதவி செய்யலாம். அதோடு, ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்கள் சீனாவின் பொருள் வினியோக சங்கிலியில் நுழைந்து, மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறலாம்.
கடந்த சில ஆண்டுகளில், எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி முதலிய துறைகளில் இரு தரப்பும் ஆழமாக ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளன. புத்தாக்கம், இரு தரப்பு ஒத்துழைப்புக்கான திறவு கோலாகும். புதிய எரிசக்தி, மின்சார வாகனம் முதலிய புதிய துறைகளில் சீனாவிலிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஆப்பிரிக்க தொழில் முனைவோர் கருத்து தெரிவித்தனர். சீனா அறிவித்த பத்து கூட்டாளி நடவடிக்கைகளில், சீன-ஆப்பிரிக்க எண்ணியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு மையத்தைக் கூட்டாக நிறுவுவதும், மின்னணு வணிகம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவதும் இடம்பெறுகின்றன. இரு தரப்பும் புதிய இயக்காற்றலைக் கூட்டாக வளர்ப்பதற்கு இது துணை புரியும்.
நவீனமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றும் இலக்கை நோக்கி, சீன-ஆப்பிரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் வளர்ச்சி, இரு தரப்பு மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் செழுமைக்கும் துணை புரியும்.