சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
2024-09-08 16:40:53

சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை, 3 லட்சத்து 28 ஆயிரத்து 820 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது கடந்த ஜூலை திங்கள் இறுதியில் இருந்ததை விட 3 ஆயிரத்து 180 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்தது. இதன் அதிகரிப்பு விகிதம் 0.98 விழுக்காடாகும்.