© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பதவி வகிக்கும் நாடான சீனாவின் பணி தொடர்புடைய தகவல்களை சீன வெளியுறவு அமைச்சகம் 9ஆம் நாள் வெளியிட்டது.
கடந்த ஜூலையில், இவ்வமைப்பின் அஸ்தானா உச்சிமாநாடு முடிந்த பிறகு, சீனா அதன் தலைவர் பதவியை ஏற்றது. அடுத்தாண்டில், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 25வது கூட்டம் சீனாவில் நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஆரம்பக் காலத்தில் இருந்த மனதுடன் தங்கள் கடமைகளை நினைவில் வைக்க வேண்டும். நெருக்கமாக ஒன்றுபட்டு ஒத்துழைத்து, உலகளவில் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நாகரிக முன்மொழிவுகளை நடைமுறைபடுத்தி, உலகின் நீண்டகாலமான அமைதி மற்றும் கூட்டுச் செழுமைக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணைத் தலைவர் சுன்வெய்தோங் தெரிவித்தார்.