இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது
2024-09-09 18:45:37

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா மூலம் 2.17 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 66.1 சதவீதம் அதிகம் ஆகும்

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி வருவாயை  ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். 2025ஆம் ஆண்டில் 30 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பொது இயக்குனர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.