பாரிஸ் ஊனமற்றோர் விளையாட்டுப் போட்டி: சீன வீரர்களுக்குப் பாராட்டுகள்
2024-09-09 09:46:47

சீனாவின் 17ஆவது ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி பிரதிநிதிக் குழுவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வாழ்த்து கடிதம் அனுப்பியது.

இவ்விளையாட்டுப் போட்டியில், சீன வீரர்கள், 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலப் பதக்கங்களை வென்று, சிறந்த சாதனைகளை படைத்தனர். தாய்நாடு மற்றும் மக்களுக்கு கௌரவத்தைக் கொண்டு வந்த வீரர்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் அரவசையும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றன என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை வழிகாட்டலாக கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 2வது மற்றும் 3வது முழு அமர்வு ஆகியவற்றின் எழுச்சியை ஆழமாக செயல்படுத்தி,

சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்க முன்னேற்றப் போக்கில், இனிமையான வாழ்க்கையை சீன சமூகம் முழுவதும் உருவாக்க ஊக்கவிக்க வேண்டும் என்றும் இதில் வெளியிடப்பட்டது.