இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே அணுசக்தி, எரிவாயு, உள்பட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன
2024-09-10 17:17:22

ஐக்கிய அரபு அமீரகம்  நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்தியாவில் இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே அணுசக்தி, எரிவாயு மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கடந்த திங்கள்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் அணுசக்தி நிறுவனம் மற்றும் இந்திய அணுமின் நிறுவனம் இடையே பராக்கா அணுமின் நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு,  அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்திற்கான நீண்ட கால ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கும், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் பட்டத்து இளவரசருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.