© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவுக்கும் நார்வேவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங்கின் அழைப்பின் பேரில், நார்வே தலைமையமைச்சர் ஜோனஸ் கஹ்ர் ஸ்டோர் 9 முதல் 11ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பசுமை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தையை உருவாக்க இரு நாடுகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
தொடர்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது, பசுங்கூட வாயுவின் வெளியேற்றத்தைக் குறைப்பது, உயிரின பல்வகைமையைப் பாதுகாத்து மீட்டெடுப்பது, புதிய பசுமைத் தொழிற்துறை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும். தற்போதுள்ள ஒத்துழைப்பு பகுதிகள் மற்றும் பசுமை மாற்றத்திற்குத் துணை புரியும் புதிய முன்மொழிவு ஆகியவை இப்பேச்சுவார்த்தையில் அடங்கும். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள்
ஒவ்வொரு இரு வருடங்களுக்கும் ஒரு கூட்டத்தை நடத்தி, முன்னேற்றத்தைத் தொகுத்துக் கூறி பேச்சுவார்த்தைக்கான புதிய இலக்குகளை வகுக்கவுள்ளனர்.