சீனாவில் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு
2024-09-10 19:12:06

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் திங்கள் வரை, சீனாவில் வாகனங்களின் உற்பத்தி அளவு ஒரு கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்தையும் விற்பனை அளவு ஒரு கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்தையும் எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 2.5 மற்றும் 3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன வாகனத் தொழில் சங்கம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சீனாவில் புதிய சக்தி வாகனங்களின் உற்பத்தி அளவு 70 லட்சத்து 8 ஆயிரத்தையும் விற்பனை அளவு 70 லட்சத்து 37 ஆயிரத்தையும் எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 29 மற்றும் 30.9 விழுக்காடு அதிகரித்தது., புதிய வாகனங்களின் மொத்த விற்பனை அளவில் புதிய எரிசக்தி வாகனங்களின் அளவு 37.5 விழுக்காடு வகிப்பது குறிப்பிடத்தக்கது.