© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவில் முதலீட்டு விவகாரங்களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்து வருவது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் செப்டம்பர் 11ஆம் நாள் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வில், 300க்கும் மேலான முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. உயர்நிலை திறப்புப்பணியை சீனா தொடர்ந்து உறுதியுடன் முன்னேற்றி, சந்தைமயமாக்கம், சட்டமயமாக்கம், சர்வதேசமயமாக்கம் ஆகியவற்றைக் கொண்ட வணிக சூழ்நிலையை உருவாக்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
மேலும், உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றும் முக்கிய இயக்காற்றலாகவும், பல்வேறு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் இடமாகவும் சீனா திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.