ஹாங்காங் பற்றி அமெரிக்காவின் எதிர்மறை மசோதாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு
2024-09-11 14:35:50

அமெரிக்க பிரதிநிதிகள் சபை செப்டம்பர் 10ஆம் நாள் பிற்பகல், ஹாங்காங் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அலுவலகம் பற்றிய சான்றிதழ் மசோதாவை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கான ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அலுவலகத்தின் சலுகைகள் பற்றிய விலக்கு உரிமையை நீக்க வேண்டும் அல்லது இவ்வலுவலகத்தை மூட வேண்டும் என்று இம்மசோதா கோருகிறது.

அமெரிக்காவுக்கான சீனத் தூதரகம் செப்டம்பர் 11ஆம் நாளில், இதற்கு கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவித்தது. இம்மசோதாவை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் மற்றும் வெளிநாடுகளில் அதன் நிறுவனங்கள் மீது வேண்டுமென்றே அவதூறு செய்வதை நிறுத்த வேண்டும். ஹாங்காங்கின் விவகாரம் மற்றும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட்டை நிறுத்தி, சீன-அமெரிக்காவின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்க்க வேண்டும். சீனாவின் கருத்துக்களை அமெரிக்கா பொருட்படுத்தாமல் செயல்பட்டிருந்தால் சீனா பயனுள்ள, வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதரகம் வெளியிட்டது.