காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்திய தலைநகரான டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை
2024-09-11 17:50:10

நாட்டின் தலைநகரான புதுதில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு தயாரிப்பு,  விற்பனை மற்றும் இருப்பு வைக்கவும் ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கும்  முழுமையான தடை விதித்து  தில்லி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்ட அறிக்கையில், இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 1 நாள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நவம்பர் 1ம் நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.