21வது சீன-ஆசியான் பொருட்காட்சி துவங்கவுள்ளது
2024-09-11 19:38:59

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 11ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 21வது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 24 முதல் 28ஆம் நாள் வரை குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் நடைபெறவுள்ளது. மலேசியா, நடப்புப் பொருட்காட்சியின் தலைப்பு நாடாகும். இப்பொருட்காட்சியின் காட்சியரங்குகளின் நிலப்பரப்பு சுமார் 2 லட்சம் சதுர மீட்டராகும். 3 ஆயிரத்துக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளன.

புதிய தர உற்பத்தி ஆற்றலுக்குச் சேவை அளிப்பதற்கான புதிய நெடுநோக்கு அம்சங்கள் பற்றிய காட்சி பகுதி, நடப்புப் பொருட்காட்சியில் புதிதாக அதிகரிக்கப்படும். மேலும், சீன-ஆசியான் இளைஞர் முன்னோடிகளுக்கான வளர்ச்சித் திட்டம் முதன்முறையாக துவங்கவுள்ளது.

தவிரவும், 21வது சீன-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 24,25 ஆகிய நாட்களில் நான்நிங் நகரில் நடைபெறவுள்ளது. சீன-ஆசியான் ஒத்துழைப்புகளின் புதிய வளர்ச்சிப் போக்கு மற்றும் புதிய தனிச்சிறப்புகள், மேற்கு பகுதியில் தரை-கடல் புதிய வழியின் கட்டுமானம், புதிய தர உற்பத்தி ஆற்றல், பசுமையான பொருளாதாரம் முதலிய அம்சங்கள் குறித்து, இந்த உச்சி மாநாட்டில் விவாதம் நடத்தப்படும்.