பாதுகாப்பு விஷயங்களுக்குப் பொறுப்பான பிரிக்ஸ் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம்
2024-09-12 17:29:46

செப்டம்பர் 11ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விஷயங்களுக்குப் பொறுப்பான பிரிக்ஸ் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ பங்கெடுத்தார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சர்வதேச பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் சிக்கலாகி, புவியமைவு போட்டி மோசமாகி வருகிறது. இந்நிலையில், அமைதி மற்றும் பாதுகாப்பின் மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலும் வலுவாகி வருகிறது. உலக அமைதி மற்றும் வளர்ச்சி லட்சியத்துக்கு, எல்லா முன்னேற்ற ஆற்றலின் ஆதரவு மற்றும் பங்களிப்பு தேவையானது. பிரிக்ஸ் நாடுகள், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நின்று, வளர்ச்சி அடிப்படையை வலுப்படுத்தி, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று உதவியைப் பரவல் செய்து, திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என சீனா முன்வைத்துள்ளது என்றார்.

மேலும், சீனா எப்போதுமே தெற்கு நாடுகளுடன் இணைந்து, சர்வதேச நேர்மை மற்றும் நீதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.