லீ ச்சியாங் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவருடன் சந்திப்பு
2024-09-12 18:49:25

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 12ஆம் நாள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் அந்நாட்டு அரசுத் தலைவர் முகமதுடன் சந்திப்பு நடத்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அரசியல் ரீதியில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன. இரு நாட்டு எதார்த்தமான ஒத்திழைப்பு, சீனாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் முன்னணியில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்தைச் செயல்படுத்தி. இரு நாட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு புதிய முன்னேற்றத்தைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, இரு தரப்பு வர்த்தக அளவை மேலும் விரிவாக்கி, முதலீடு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

முகமது கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் கடைப்பிடித்து, சீனாவின் நம்பகத்தக்க கூட்டாளியாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானத்தில் கூட்டாக பங்கெடுக்கும் நெடுநோக்கு கூட்டாளியாகவும் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, எரியாற்றல், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை சீனாவுடன் முன்னேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.