தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பான சீன-பிலிப்பைன்ஸ் ஆலோசனை
2024-09-12 10:04:50

சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சென் சியாவ்தொங் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் தெரசா பி. லாசாரோ ஆகியோர் செப்டம்பர் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பான சீன-பிலிப்பைன்ஸ் ஆலோசனை அமைப்பு முறைப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

கடல் தொடர்பான சீன-பிலிப்பைன்ஸ் பிரச்சினை, குறிப்பாக சியான்பின் ஜியாவோ பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் நேர்மையாகவும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் போது சியான்பின் ஜியாவோ பிரச்சினை தொடர்பான கோட்பாட்டையும் நிலைப்பாட்டையும் சீனா மீண்டும் வலியுறுத்தியது. மேலும், பிலிப்பைன்ஸ் தொடர்புடைய கப்பல்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த சீனா, தென் சீனக் கடலுடனான தனது இறையாண்மையையும், தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையின் பயனையும் உறுதியாகப் பேணிகாக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.