பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்திற்கான உயர் நிலை பிரதிநிதிக் குழு கூட்டத்தொடர் தொடக்கம்
2024-09-12 10:30:04

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்திற்கான உயர் நிலை பிரதிநிதிக் குழுவின் 14ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 11ஆம் நாள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் பங்கெடுத்தார். உலகளவிலான பாதுகாப்பு அச்சுறுதல், பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, உலகளவிலான மேலாண்மை முதலியவை இதில் விவாதிக்கப்பட்டன.

தற்போதைய உலகம், கொந்தளிப்பான நிலையில் உள்ளதோடு, சீர்திருத்தம் செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது. வளரும் நாடுகள் மீதான தலையீடு, தடுப்பு மற்றும் மேலாதிக்கம் ஆகியன தீவிரமாகியுள்ளன. இதன் பின்னணியில், பிரிக்ஸ் நாடுகள் அமைதியைப் பேணிக்காக்கும் நடவடிக்கைகளைத் தேடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாங்யீ தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தொடர், பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய அமைப்புமுறையாகும் எனக் குறிப்பிட்ட அவர், நெடுநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, முக்கிய நலன்கள் குறித்த கவனம் ஈர்க்கும் அம்சங்களைக் கருத்தில் கொண்டு,  உலகின் அமைதி மற்றும் நிதானத்திற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரேசில், எகிப்து, இந்தியா, ஈரான், செர்பியா முதலிய நாடுகளின் பாதுகாப்புக்கான உயர் நிலை பிரதிநிதிகளுடன் வாங்யீ முறையே இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.