சீன-இந்திய உறவு தொடரவல்ல வளர்ச்சி பாதைக்குத் திரும்ப வேண்டும்: வாங்யீ
2024-09-13 09:25:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகாரக் கமிட்டித் தலைவருமான வாங்யீ, 12ஆம் நாள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இந்திய தேசியப்  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச்  சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, சமீபத்திய எல்லை விவகாரக் கலந்தாலோசனைகளின் முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இரு தரப்புறவின் நிதானம், இரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குப் பொருந்தி, பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு தரப்புறவின் மேம்பாட்டிற்கு நிபந்தனைகளை உருவாக்கி, அடிப்படையில் தொடர்ந்து தொடர்பு மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

சீனாவும் இந்தியாவும் தற்சார்பின் வழியில் நடைபோட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் மூலம், இரு பெரிய அண்டை நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பழகுவதற்குரிய சரியான பாதையைத் தேடி, சீன-இந்திய உறவு மீண்டும் சரியான, சீரான, தொடரவல்ல வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பச் செய்ய பாடுபட வேண்டும் என்று வாங்யீ வலியுறுத்தினார்.