தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையைச் செயல்படுத்துவதற்கான 22வது உயர்நிலை கூட்டம்
2024-09-13 17:50:47

தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையைச் செயல்படுத்துவதற்கான 22வது உயர்நிலை கூட்டத்தை, சீனாவும் ஆசியான் நாடுகளும் செப்டம்பர் 13ஆம் நாள் நடத்தின. சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் இயக்குநர் ஹோங்லியாங் மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் அம்ரன் இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினார். ஆசியான் நாடுகளின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு தரப்புகள் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, கட்டுப்பாடு சிந்தனையுடன் கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கையாண்டு, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, கடல் பகுதியில் நிதானமான நிலைமையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சீனா மற்றும் ஆசியான் நாடுகள் ஒரு மனதாக கருத்து தெரிவித்தன.

மேலும், இந்த அறிக்கையைத் தொடர்ந்து பன்முகங்களிலும் செயல்படுத்தி, கடல் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, மீட்புப்பணி, சட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க பல்வேறு தரப்புகள் ஒப்புக்கொண்டன.