11ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றம் துவக்கம்
2024-09-13 14:50:33

 

11ஆவது பெய்ஜிங் சியாங்ஷேன் மன்றம் செப்டம்பர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இம்மன்றத்தின் துவக்க விழாவில் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் தூன்ஜூன் பங்கேற்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தியைப் படித்து உரை நிகழ்த்தினார்.

தூன்ஜூன் சுட்டிக்காட்டுகையில், மாற்றங்கள் நிறைந்திருக்கும் காலத்தில் நாங்கள் ஒன்றுக்கொன்று மதிப்பளிக்க வேண்டும். திறப்பு மற்றும் பொறுமைத் தன்மை, ஒத்தழைப்பு மற்றும் கூட்டு வெற்றியில் ஊன்றி நிற்க வேண்டும். கொந்தளிப்பு மற்றும் சர்ச்சையைச் சந்தித்து அதனை அரசியல் வழிமுறையில் தீர்ப்பதில் உறுதியாக நிற்க வேண்டும். புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டைப் பின்பற்றி அமைதி மற்றும் நிதானத்தை முன்னேற்றும் ஆக்கப்பூர்வமான ஆற்றலைக் கூட்டாக ஒன்றிணைக்க வேண்டும். மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதற்கும், உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிகாப்பதற்கும் மேலும் பெரிய பங்காற்றும் வகையில், உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பில் சீன ராணுவம் உறுதியாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.