சீன-இந்திய உறவு பற்றி சீனா கருத்து
2024-09-13 19:27:48

இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரின் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நிங் அம்மையார் செப்டம்பர் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அவர்கள் 12ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் சந்திப்பு நடத்தினர். அண்மைகாலத்தில் எல்லை விவகாரம் பற்றிய கலந்தாய்வின் முன்னேற்றம் குறித்து அவர்கள் விவாதித்ததோடு, இரு நாட்டு தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்தைச் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரித்து, இரு தரப்புறவின் மேம்பாட்டுக்கு வாய்ப்பு வழங்கி, இது பற்றி தொடர்பை நிலைநிறுத்துவதென ஒருமனதாக ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சீன-இந்திய எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு முதலிய நான்கு பகுதிகளில் இரு தரப்புகளைச் சேர்ந்த முன்னணி படைகள் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளன. சீன-இந்திய எல்லைப் பகுதி நிலைமை பொதுவாக நிதானமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.